ஒசூர் அருகே டாடா தொழிற்சாலை மகளிர் விடுதியின் குளியல் அறையில், ரகசிய கேமரா வைத்த வடமாநில இளம் பெண்ணுக்கு உடந்தையாக இருந்த அவரது ஆண் நண்பரை, தனிப்படை போலீசார் டெல்லியில் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் ஒடிசாவை சேர்ந்த நீலு குமாரி குப்தா கைது செய்யப்பட்ட நிலையில், ஆண் நண்பரான பெங்களூருவை சேர்ந்த ரவி பிரதாப் சிங் உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரிய வந்தது. அவரை கைது செய்ய பெங்களூரு சென்ற தனிப்படை போலீசார், அவர் வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றதை அறிந்து டெல்லி சென்று கைது செய்தனர். பின்னர், தமிழகம் கொண்டு வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.இதையும் பாருங்கள் - Hidden camera | Hosur women’s hostel | மகளிர் விடுதியில் கேமரா, வசமாக சிக்கிய காதலன் | Arrest