ஈரோட்டில் மீன் பிடிக்க நண்பர்களுடன் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பியாபாளையம் அரசு பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்த ரோகித் என்ற சிறுவன், தமது நண்பர்கள் சசிகுமார், ரித்தீஷ் ஹரிஹரசுதன் ஆகிய மூவருடன் மலையப்பாளையத்தில் உள்ள முருகன் கோவில் குளத்திற்கு மீன் பிடிக்க சென்றார். அப்போது திடீரென கால் வழுக்கி நீரில் விழுந்த அவரை காப்பாற்ற நண்பர்கள் முயன்றனர். சிறுவர்கள் கூச்சலிட்டதை அடுத்து அருகில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்மணி துண்டை வீசி காப்பாற்ற முயன்றதில் சசிகுமார், ரித்தீஷ், ஹரிஹரசுதன் ஆகியோர் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதற்குள் நீரில் மூழ்கிய ரோகித் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.