சிவகங்கை அருகே பேச்சுமூச்சு இல்லாமல், நாடித்துடிப்பும் குறைந்த நிலையில் கொண்டுவரப்பட்ட சிறுவனை ஒரு மாத காலம் போராடி காப்பாற்றிய மருத்துவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ஆதீஸ்வரன் என்கிற 12 வயது சிறுவனை பாம்பு கடித்தது தெரியவந்ததால், செயற்கை சுவாசம் பொருத்தி விஷ முறிவு மருந்துகள் கொடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.