சேலம் மாவட்டம் கொங்குபட்டியில், விவசாய நிலத்தில் பட்டியலின சிறுவன் மலம் கழித்ததால் ஆத்திரமடைந்த விவசாயி, அதனை கையால் அள்ளச் சொல்லி சிறுவனை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மோகன் என்பவரது விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து, ரமேஷ் என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியில் வசிக்கும் சுரேஷ்குமார் என்பவருடைய மகன் 15 வயது மகன், விவசாய நிலத்தின் ஓரம் மலம் கழித்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்டு ஆத்திரமடைந்த ரமேஷ், மலத்தை அள்ளச் சொல்லி சிறுவனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தாக்குதல் நடத்திய விவசாயி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதையும் படியுங்கள் : ராணிப்பேட்டையில் முழுகொள்ளளவை எட்டிய 144 ஏரிகள்