கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தந்தை கண்முன்னே டிராக்டரில் இருந்து தவறி விழுந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புகைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால், வாடகை டிராக்டர் வைத்துள்ள நிலையில் கடந்த 13 ம் தேதி திருவேங்கடம் என்பவரது வயலில் உழும் பணியில் ஈடுபட்டர். அவருடன் அவரது 13 வயது சிறுவன் சதீஷ்குமார் உடன் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது டிராக்டரில் தந்தையின் அருகே அமர்ந்திருந்த சதீஷ்குமார் திடீரென தவறி கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிபெற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.