ஈரோடு மாவட்டம் பவானி அருகே தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் தாறுமாறாக ஓடிய கார் சாலை ஓர குடிசையில் புகுந்து விபத்துக்குள்ளானதில், அங்கு தூங்கிக் கொண்டிருந்த பெண் இளநீர் வியாபாரி உடல்நசுங்கி உயிரிழந்தார். விடுமுறையில் உறவினர் வீட்டிற்கு வந்த சிறுவன் நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் கார் ஓட்டி பழகுவதற்காக எடுத்து வந்து விபத்து ஏற்படுத்தியது விசாரணையில் தெரிய வந்தது.