திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த வெடிகள் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈச்சங்கால் கிராமத்தை சேர்ந்த சபரி, அனுமதியின்றி நாட்டு வெடிகள் மற்றும் பட்டாசுகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த நிலையில், அவை திடீரென வெடித்துச் சிதறியதில் அவரது கை விரல்கள் துண்டானதோடு, கண்களிலும் காயம் ஏற்பட்டது.