ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே மயானம் இல்லாததால், மாரடைப்பில் உயிரிழந்தவரின் உடலை அருந்ததியர் மக்கள், சாலையோரம் எரிக்கும் அவலநிலை ஏற்பட்டது. கல்புத்தூர் மற்றும் வில்வநாதபுரம் பகுதியில் 300 க்கும் மேற்பட்ட அருந்ததியர் மக்கள் வசித்து வரும் நிலையில், இவர்கள் இறந்தவர்களை அடக்கம் செய்யவதற்கும், எரியூட்டுவதற்கும் இடுகாடு கேட்டு பலமுறை ஆட்சியர் உள்ளிட்ட பலரிடம் மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.