தேனி மாவட்டம் உத்தமபாளையம் முல்லை பெரியாறு ஆற்றுப் பாலத்துக்கு கீழ் கிடந்த மூதாட்டியின் சடலத்தை தீயணைப்பு துறையினர் மீட்டனர். முல்லை பெரியாறு ஆற்று பாலத்துக்கு அடியில் மூதாட்டியின் சடலம் கிடப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, விரைந்து சென்ற காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் கயிறு கட்டி கீழே இறங்கி நீச்சல் அடித்து சென்று சடலம் கிடந்த இடத்தை அடைந்தனர். பின்னர், மரத்தின் அடியில் சிக்கி இருந்த மூதாட்டியின் சடலத்தை மீட்டு கயிறு கட்டி இழுத்து மேலே கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த மூதாட்டி அணைப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஒச்சம்மாள் என்பது தெரியவந்தது.