புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட நர்சிங் கல்லூரி மாணவியின் உடல் மீண்டும் உடற்கூராய்வு செய்யப்பட்டு பெற்றோர் வசம் ஒப்படைக்கப்பட்டது. கருக்காக்குறிச்சியை சேர்ந்த சவுமியா என்ற அந்த மாணவி கடந்த 25 ஆம் தேதி காணாமல் போன நிலையில், 27 ஆம் தேதி விவசாய கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.