கன்னியாகுமரி மாவட்டம் லீபுரத்தில் எரிந்த நிலையில்கிடந்த ஆண் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அது கொலை என கண்டுப்பிடித்தனர். உயிரிழந்தவர் ஹரிஹரசுதன் என்பதும், நண்பர்களுடன் மது அருந்தும் போது ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறியதில், உடன் இருந்த 3 பேர் அவரை அடித்துக்கொன்று தீயிட்டு கொள்ளுத்தியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.