திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்ட ரத்த வங்கி பயன்பாட்டுக்கு வராததால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர். அத்துடன் தானம் கொடுப்பவர்கள் 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இது குறித்து கேட்கப்பட்ட போது, ரத்தத்தை சேமித்து வைப்பதற்கான உரிமம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் ரத்த வங்கி செயல்பாட்டுக்கு வரும் என்றும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.