திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணாக்கர்கள் வராந்தா மற்றும் மொட்டை மாடியில் அமர்ந்து கல்வி கற்கும் அவல நிலையை கண்டித்து பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து தடை பட்டதால் அங்கு விரைந்த போலீசார், பாஜகவினரை குண்டுக்கட்டாக கைது செய்ய முயன்ற நிலையில் இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு போலீசார் அனைவரையும் கைது செய்து அழைத்து சென்றனர்.