ஆட்சி, அதிகாரத்தின் மூலம் ஜனநாயகத்தை சிதைக்க பாஜக துடிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் சாடியுள்ளார். சேலத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர், தமிழ்நாட்டில் திமுக கூட்டணி வலுவாக இருந்தாலும், பீகாரில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் நடந்ததையும் நாம் பொருத்தி பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அச்சம் தெரிவித்தார்.