விழும்புரம் மாவட்டம் ஆரோவில் அடுத்த ஆலங்குப்பத்தில் உள்ள அங்காளம்மான் கோயிலில் பூசாரிகள் மீது மிளகாய் பொடி பூசி வினோத அபிஷேகம் நடைபெற்றது. கோயில் முன்பு அமர வைக்கப்பட்ட பூசாரிகளின் மீது 50 கிலோ அளவிலான மிளகாய் பொடி பூசி வினோத அபிஷேகம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, அவர்களுக்கு தயிர், பால், இளநீர் உள்ளிட்ட திரவியங்களை கொண்டு ஆறு வகையான அபிஷேகம் செய்யப்பட்ட நிகழ்வில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.