நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சாலையில் சென்ற பைக் திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமானது. வடுகம் பகுதியை சேர்ந்த பெயிண்டர் பிரகாஷ், வேலை முடித்துவிட்டு பைக்கில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது பைக்கில் இருந்து புகை வந்ததை அடுத்து, அவர் பைக்கை விட்டு கீழே இறங்கிய சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிந்தது.