சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்ததுதான் அரசியலில் தாம் செய்த மிகப்பெரிய தவறு என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். பூந்தமல்லியில் நடைபெற்ற கட்சி சென்னை மண்டல செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், கடைசிவரை திமுக கூட்டணியில்தான் மதிமுக இருக்கும் எனவும், இது தமது கட்டளை எனவும் தெரிவித்தார்.