திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே நிலத்தை சமன் செய்யும்போது, பெரிய பாறை ஒன்று உருண்டு ஜேசிபி இயந்திர வாகனம் மீது விழுந்த நிலையில், ஓட்டுநர் உடனடியாக கீழே குதித்து உயிர் தப்பினார். நாயனசெருவு பகுதியை சேர்ந்த ஆதிகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான 57 சென்ட் நிலம் மேடுபள்ளமாகவும், பாறைகளும் நிறைந்து இருந்ததால், பூபாலன் என்பவர் அதனை சமன்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது பாறை உருண்டு விழுந்ததில், ஜேசிபி இயந்திர வாகனம் அப்பளம் போல் நொறுங்கியது.