மயிலாடுதுறையில் உள்ள பெரிய மாரியம்மன் கோவிலின் தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பெரிய மாரியம்மன் கோவிலின் 63ஆவது ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 30 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வந்தது. தொடர்ந்து 10 ஆம் நாள் விழாவான தீமிதி திருவிழாவை முன்னிட்டு மேள தாளம் முழங்க கரக ஊர்வலம் நடைபெற்றது. இதனையடுத்து காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் தீக்குழியில் இறங்கி நேர்த்திகடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர்.