நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் லேசான மழை பெய்து வரும் நிலையில், உபதலை என்ற குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கரடி ஒன்று மழைக்காக வீட்டின் மேல் ஒதுங்கி ஓய்வெடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனால் அச்சமடைந்துள்ள குடியிருப்பு வாசிகள் வனத்துறையினர் கரடியை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விட கோரிக்கை வைத்துள்ளனர்.