கரூர் திருமாநிலையூரில் புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணியை தொடங்கலாம் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பேருந்து நிலையத்தை திருமாநிலையூருக்கு பதிலாக தோரணக்கல்பட்டியில் கட்ட வேண்டும் என பலர் வழக்கு தொடர்ந்த நிலையில், அப்பணிக்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டது. இதனிடையே கட்டுமான பணியின் போது வாய்க்கால்களை சேதப்படுத்தியதாக கரூர் மாநகராட்சிக்கு 25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் உள்ளிட்டவை நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பேருந்து நிலைய கட்டுமான பணிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டனர்.