தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபரை குண்டர் தடுப்பு சட்டத்தில், சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அருமலைக்கோட்டை பகுதியில் நடந்த கொலை வழக்கில், விவேக் என்பவரை போலீசார் கைது செய்திருந்த நிலையில், தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க அவர் குண்டாசில் சிறையிலடைக்கப்பட்டார்.