ராணிப்பேட்டை அருகே மோட்டார் வாகன பெண் ஆய்வாளர் வீட்டில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீஸார், 4 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். நவல்பூரை சேர்ந்த ஸ்ரீ தேவி ஜெயந்தி பணிபுரியும் வட்டார போக்குவரத்து சோதனை சாவடி மற்றும் அவரது அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது.