புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் அமைந்துள்ள ஆத்மநாத சாமி கோவிலின் ஆனி மாத திருவிழாவையொட்டி, ஆனித்திருமஞ்சன திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. திருத்தேரில் மாணிக்கவாசக பெருமான் எழுதருளிய நிலையில், ஆவுடையார்கோவில் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஆத்மநாதா, மாணிக்கவாசகா என்று பக்தி கோஷம் எழுப்பி, தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருத்தேரானது நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து பின்பு தேரடியை அடைந்தது.இதையும் படியுங்கள் : தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மீன்களுக்கு நல்ல விலை... ரூ.3 கோடி அளவிற்கு மீன்களின் விற்பனை நடைபெற்றது