சென்னை எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் திரையரங்கு சுத்தமாக இல்லை என படம் பார்க்க வந்த பெண் கொந்தளித்து வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.திரையரங்கின் சீட் கிழிந்து உட்கார முடியாத அளவுக்கு இருப்பதாகவும் கழிப்பறையில் துர்நாற்றம் வீசுவதாகவும் புகார் கூறி பெண் திரையரங்கு மேலாளரிடம் கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டார்.ஒரு டிக்கெட்டுக்கு 225 ரூபாய் வசூலிக்கப்படும் நிலையில் எந்தவித பராமரிப்பும் இன்றி திரையரங்கு அசுத்தமாக இருப்பதாகவும் சிறுநீர் நாற்றம் வீசுவதாகவும் புகார் கூறினார். வாக்குவாதம் செய்த பெண்ணுக்கு டிக்கெட் தொகையை திருப்பி கொடுத்து திரையரங்கு மேலாளர் சமாதானம் செய்ய முயன்ற காட்சிகளும் வெளியாகியுள்ளது.