தலைமை செயலகத்தில் இருந்து தங்கும் விடுதிக்கு செல்ல உரிய நேரத்தில் பேருந்து வருவதில்லை என புகார் கூறியிருந்த அதிமுக எம்.எல்.ஏ.க்களை, பேருந்தில் ஏற்றி அமைச்சர் சிவசங்கர் வழியனுப்பி வைத்தார். சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ கோவிந்த சாமியின் கோரிக்கைக்கு பதில் அளித்த அமைச்சர் சிவசங்கர், சட்டப்பேரவை முடிந்ததும் பேருந்து வரும் வரை தாமே நின்று வழியனுப்பி வைப்பதாக கூறியிருந்தார்.