சென்னை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தை அதிமுக முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் வழிமறித்து மனு அளித்தனர். சேலத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவரை வரவேற்க கட்சித் தொண்டர்கள் விமான நிலையத்தில் காத்திருந்தனர். அப்போது, ஓபிஎஸ் அணியினர் உடன் சேர்ந்து கட்சிக்கு எதிராக செயல்படுவதாக ஆலந்தூர் கிழக்கு பகுதி செயலாளர் பரணி பிரசாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகள் கையெழுத்திட்ட மனு ஒன்றை அளித்து கோரிக்கை விடுத்தனர்.இதையும் படியுங்கள் :தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் பீகாரியான ஆர்.என்.ரவி