சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஏகாம்பரநாதர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டட பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். பிறகு செய்தியாளரை சந்தித்த அமைச்சர், பெரியார், அண்ணாவை கடுமையாக விமர்சித்த இந்து முன்னணி கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றதன் மூலம், பாஜகவிடம் அதிமுகவை அடிமைசாசனம் எழுதி கொடுத்தது தெரியவந்துள்ளதாக கூறினார். போட்டிக்காக நடத்தப்பட்ட இந்த முருக பக்தர்கள் மாநாடு, அரசியல் மாநாடுதான் என தெரிவித்தார். இதையும் படியுங்கள் : "அண்ணா பெயரை பயன்படுத்தும் தகுதி அதிமுகவிற்கு இல்லை"