அதிமுக, பாஜக கூட்டணிக்கு இன்னும் பல கட்சிகள் வரும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் எடப்பாடி பழனிசாமி மக்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என சூளுரைத்தார்.