மயிலாடுதுறை அருகே அழகுகலை நிபுணரை மேக்கப் போட அழைத்துச் சென்று தவறாக நடக்க முயற்சித்த அதிமுக ஐடிவிங் நிர்வாகி தினகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். செம்பனார்கோவில் அருகே மேலபாதி சிவன் கோவில் தெருவை சேர்ந்த பெண் ஒருவர் கீழையூர் சத்திரம் பகுதியில் அழகு நிலையம் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த அதிமுக ஐடிவிங் நிர்வாகி தினகரன் நண்பரின் குழந்தைக்கு பிறந்தநாளுக்கு மேக்கப் போட வேண்டும் என கூறி, அந்த பெண்ணை இருசக்கர வாகனத்தில் யாரும் இல்லாத வீட்டிற்கு அழைத்து சென்று கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.