தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து, மேக்கரையில் உள்ள அடவிநயினார் அணை முழு கொள்ளளவான 132 அடியை எட்டியது. அணைக்கு விநாடிக்கு 130 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், முழுவதும் உபரி நீராக வெளியேற்றப்படுகிறது. இதனால் அனுமன்நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி பொதுப்பணித்துறை எச்சரித்துள்ளது.இதையும் படியுங்கள் : மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிரான சிறு வழக்குகள்..