சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 8-ஆம் வகுப்பு படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவரை போலீஸார் கைது செய்தனர். தம்மம்பட்டி பகுதியை சேர்ந்த இஸ்மாயில், தனியார் கிளினிக்கில் மருத்துவ உதவியாளராக இருந்து விட்டு, சில ஆண்டுகளாக தனியாக வீட்டில் ஆங்கில மருத்துவம் பார்த்தது தெரியவந்தது.