நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நடைபெற்ற கோவில் தேரோட்ட விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேவர்சோலை சாலை சிவசண்முக நகர் ஸ்ரீ சத்ய நாகராஜா சுவாமி கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.