தென்காசி மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற தேவாலயமாகவும், அனைத்து மதத்தினராலும் சர்வேஸ்வரன் ஆலயம் என அழைக்கப்படுவதுமான, புனித மிக்கேல் அதிதூதர் தேவாலய, ஆண்டுப்பெருவிழா கொடியேற்றம் கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக, அகரகட்டு தேவாலயத்தில் இருந்து கொடிப்பட்டம் பேண்ட் வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அப்போது கொடிப்பட்டத்திற்கு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, தேவாலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் சிறப்பு பிரார்த்தனையுடன் கொடியேற்றப்பட்டது. பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியின் முதல்வர் அருட்பணி காட்வின் ரூபஸ் அடிகளார் தலைமையிலும், அகர கட்டு பங்குத்தந்தை அலாசியஸ் துரைராஜ் அடிகளார், பாளையம் செட்டிகுளம் பங்குத்தந்தை அருட்பணி ஜோமிக்ஸ் அடிகளார், சுரண்ட பங்குத் தந்தை ஜோசப் ராஜன் முன்னிலையிலும் திருக்கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து நவநாள் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து 9ஆம் நாள் நிகழ்ச்சியாக நவநாள் சிறப்பு திருப்பலியும், 10ஆம் நாளில் ஆடம்பர கூட்டுத் திருப்பலியும் நடைபெற உள்ளது.