ஆகஸ்ட் 21ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு வரும்போதும், மாநாடு நிறைவடைந்து திரும்பும் போதும் ஒழுங்கையும், பாதுகாப்பையும் ராணுவ கட்டப்பாட்டுடன் கடைப்பிடிக்க வேண்டும் என அக்கட்சியின் தலைவர் விஜய், தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் தகுதியும் பொறுப்பும் மிக்க ஓர் அரசியல் பேரியக்கம் என்பதை ஒவ்வொரு செயலிலும் காட்ட வேண்டியது நமது தலையாய கடமை என விஜய் தெரிவித்துள்ளார். மேலும், கர்ப்பிணிகள், கைக்குழந்தை வைத்துள்ள சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் வீட்டிலிருந்தபடியே மாநாட்டை நேரலையில் பார்க்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.