காரைக்காலில் புகழ்பெற்ற தூய தேற்றரவு அன்னை தேவாலயத்தின் 284 ஆம் ஆண்டு பெருவிழாவில், தேர் பவனி கோலாகலமாக நடைபெற்றது. இவ்வாலயத்தின் தேர் பவனியை ஒட்டி, புதுவை மற்றும் கடலூர் உயர்மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் சிறப்பு திருப்பலி பூசை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புனித தேற்றரவு அன்னையின் தேர் பவனி, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்று ஆலயத்தை வந்தடைந்தது. அதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு புனித தேற்றரவு அன்னையை வழிபட்டனர்.