கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பாப்பயம்பாடி மாரியம்மன் கோயிலில் 25ஆம் ஆண்டு பூக்குழி இறங்குதல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் விரதம் இருந்து பாதயாத்திரையாக வந்து பூக்குழி இறங்கி சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.