நீலகிரி மாவட்டம் உதகையில் 20 ஆவது ரோஜா கண்காட்சி தொடங்கியது. கடல் வாழ் உயிரினங்களை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 2 லட்சம் ரோஜா மலர்கள் கொண்டு பிரம்மாண்ட டால்பின், பெங்குவின், நத்தை, மீன் என வடிவமைக்கப்பட்டுள்ள கண்காட்சி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த ரோஜா பூ கண்காட்சி வரும் 12 ஆம் தேதி வரை நடைபெறும் என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.