பங்குனி மாத பிறப்பை ஒட்டி, நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் சந்தி மறித்தம்மன் திருக்கோவிலில் 2 ஆயிரத்து 8 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர். திருவிளக்கு பூஜையை ஒட்டி, உற்சவர் சந்திமறித்த அம்மன் சிம்ம வாகினி கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.