வடலூர் சத்திய ஞான சபையில் 154ஆவது ஆண்டு தைப்பூச விழாவையொட்டி ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்பட்டது. அப்போது பக்தர்கள் பக்தி பரவசத்தில் அருட்பெரும்ஜோதி, அருட்பெரும்ஜோதி, தனிபெரும் கருணை என வழிபாடு செய்தனர். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என பாடிய வள்ளலாரால் நிறுவப்பட்ட அருட்பிரகாச சத்திய ஞான சபையில் 154 ஆவது தைப்பூச திருவிழா கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கிய, முக்கிய நிகழ்வாக ஆறுகால ஜோதி தரிசனம் நடைபெற்றது.