கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வீட்டுத் தோட்டத்தில் புகுந்த முதலையை, வனத்துறையினர் பிடித்து ஏரியில் விடுவித்தனர். அம்மாப்பேட்டை தோப்புத்தெரு பகுதியில் சம்பந்தமூர்த்தி என்பவரது வீட்டு தோட்டத்தில் 13 அடி நீளமுள்ள முதலை புகுந்தது. தகவலறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் 550 கிலோ எடையிலான முதலையை லாவகமாக பிடித்து, பாதுகாப்பாக கொண்டு சென்று வக்கிரமாரி ஏரியில் விடுவித்தனர்.