நீலகிரி மாவட்டம் கூடலூரில் நடைபெற்ற 11வது வாசனை பொருட்கள் கண்காட்சியில், இறுதி நிகழ்வாக உள்ளூர் கலைஞர்களின் கலை நிகழ்ச்சியும், பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது. கூடலூரில் உள்ள தனியார் பள்ளி அரங்கில் கடந்த 9-ஆம் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெற்ற இக்கண்காட்சியை, செய்தித் துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஆகியோர் தொடங்கி வைத்தார். இதில் 13 வகையான 395 கிலோ வாசனை திரவியங்களைக் கொண்டு அமைக்கப்பட்ட மலை ரயில் நிலையத்திற்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. இதே போல் வாசனை திரவியங்களை கொண்டு வண்ணத்துப்பூச்சி, அலங்கார வளைவு உள்ளிட்டவையும் காட்சிப்படுத்தப்பட்டன.