மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழக சிறப்பு பொதுக்குழு நடைபெற்றது. இக்கூட்டத்தில், தவெக தலைவர் விஜய் பேசியதாவது; என் நெஞ்சில் குடியிருக்கும், என் தோழர்களுக்கும் தோழிகளுக்கும், தமிழக மக்களுக்கும் என் வணக்கம். நமது குடும்ப உறவுகளை இழந்ததால், சொல்ல முடியாத வேதனை, வலி. இந்த சூழ்நிலையில், அவர்களோடு சேர்ந்து, நாம் அமைதி காத்து வந்தோம். நாம், அமைதி காத்து வந்த நிலையில், வன்ம அரசியல், அர்த்தமற்ற அவதூறுகள், தவெக மீது பின்னப்பட்டன, பரப்பபட்டன. இதெல்லாம், சட்டம் மற்றும் சத்தியத்தின் துணை கொண்டு துடைத்து எறியத்தான் போகிறோம். தமிழக சட்டமன்றத்தில், முதல்வர் பேசியதற்கு, நாகரீக பதிலடி, தரப் போகிறேன். 15-10-2025ல் பேசிய முதல்வர், அரசியல் செய்ய விருப்பமில்லை என கூறும் முதல்வர், நம்மைக் குறிப்பிட்டு பல்வேறு அவதூறுகளை கூறினார். நமக்கு எதிராக பேசிய பேச்சு, வன்மத்தை கக்கியது. அரசியல் செய்ய முயல்கிறார் என்பதை, தமிழக மக்கள் உணராமலா இருப்பார்கள்? கரூர் உடன் சேர்த்து, 5, 6 மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினோம். ஒவ்வொரு முறையும், இடம் கொடுப்பார்களா, மாட்டார்களா? ஏனென்றால், இழுத்தடித்து இருப்பார்கள். நாம் ஒரு இடத்தை தேர்வு செய்தால், பொது மக்கள் நெருக்கடியாக நிற்கும் நிலையிலான இடத்தை தருவார்கள். இந்தியாவிலேயே, ஒரு அரசியல் கட்சி தலைவருக்கு தரப்படாத கட்டுப்பாடு. பஸ்சில் தான் இருக்க வேண்டும், வெளியில் வரக்கூடாது என்று. அதனால், தான், அனைத்து கட்சிகளுக்கும் முறையாக, பொதுவான வழிகாட்டுதல் வேண்டும் எனக் கூறி, நீதிமன்றத்தை நாடி இருக்கிறோம். ஒரு அரசியல் காழ்ப்புடன், நம்மை பற்றி குறுகிய மனம் கொண்டவரிடம் சில கேள்விகள். உச்சநீதிமன்றத்தில், அறிவார்ந்த வழக்கறிஞர்கள் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டார்கள். உச்ச நீதிமன்றத்தில் திக்கித் திணறி, வாய்மூடி நின்றார்கள் அந்த வழக்கறிஞர்கள். மறந்து விட்டதா?அவசர அவசரமாக ஒரு தனி நபர் ஆணையம், அரசு உயர் அதிகாரிகள் அவசர அவசரமாக அவதூறாக பேசியது, இதை நான் சொல்லவில்லை. ஒட்டு மொத்த தமிழக மக்களும் கேட்கின்றனர். முதல்வர் மறந்து விட்டாரா? தனி நபர் ஆணையத்தை, தலையில கொட்டி, வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டது உச்சநீதிமன்றம். சட்டமன்றத்தில், உண்மை நிலையை தெளிவு படுத்த தான், என சாமர்த்தியமாக, முதல்வர் பேசினார். வடிகட்டின பொய் என்று, உச்ச நீதி மன்றமே கூறிவிட்டது. தனி நபர் ஆணையத்தால், நியாயமான விசாரணை நடக்குமா? என பொது மக்களுக்கே சந்தேகம் வந்துவிட்டது. உச்சநீதிமன்றம், தமிழக அரசின் தலை மீது ’நறுக் நறுக்’ என கொட்டியது முதல்வர் மறந்து விட்டாரா?உயர்நீதிமன்ற உத்தரவு, நமக்கு எதிரானதாக மாற்றி, நாடகத்தனமாக விழா எடுத்தே கொண்டாடினார்களே?தனி நபர் ஆணையம் எந்த அடிப்படையில் அமைக்கப்பட்டது...? என நான் கேட்கவில்லை, உச்சநீதிமன்றமே கேட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் கேள்விக்கு, திமுக வழக்கறிஞர்கள் பதில் சொல்ல முடியாது, வாய் மூடி நின்றதை மக்களே பார்த்தனர். முதல்வர் மறந்து விட்டாரா?ரிட் மனுவை, டிவிசன் அமர்வு தான் கையாள வேண்டும், தனி நீதிபதி கையாள கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியது. உச்சபட்ச அதிகார மயக்கத்தில் பேசினாரோ முதல்வர். மனிதாபிமானம், அரசியல் அறம், மாண்பு இல்லாமல், அரசியல் ஆதாயம் தேடும் ஆட்டத்தை தொடங்கி விட்டார் முதல்வர். அவர்களை கேட்க ஆள் இல்லாமல் போய்விட்டது. இந்த கேள்விகளை எல்லாம், நான் கேட்கவில்லை. உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது. உங்கள் மேல் நம்பிக்கை இல்லை என்று அர்த்தம். உச்சநீதிமன்றம் மட்டுமல்ல, மக்களுக்கும் அரசு மீது நம்பிக்கை இல்லை. 2026ல், ஆழமாக, அழுத்தமாக மக்கள் புரிய வைப்பார்கள். 5 வருஷத்துக்கு ஒரு முறை, பழக்க தோஷத்தால், “மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம்” என்று கூறி விட்டு ஒளிந்து கொள்வீர்களே?”மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம்” என்று இப்போதே அறிக்கை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இயற்கை, இறைவன் என தமிழக சொந்தங்களுக்காக, என் மக்களுக்கான அரசியலை தடுப்பவர் யார்?இந்த இடையூறுகள் தற்காலிகம் தான். இடையூறுகளை தகர்த்தெறிவோம்... மக்களோடு கை கோர்த்து நிற்போம், களத்தில் நிற்போம்2026ஆம் ஆண்டில் இரண்டே பேருக்கு மத்தியில் தான் போட்டியே.. இந்த போட்டி, இன்னும் ’ஸ்ட்ராங்க’ ஆக மாறப் போகுது...100 சதவீதம் வெற்றி நிச்சயம், வாகை சூடுவோம்...இவ்வாறு விஜய், உரை நிகழ்த்தினார். இதையும் பாருங்கள் - மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் விஜய் பேச்சு - தமிழக வெற்றிக் கழக சிறப்பு பொதுக்குழு