தவெக தலைவர் விஜய் நாளை ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் தனியார் கல்லூரி வளாகத்தில் மக்களை சந்திக்கும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வளாகம் முழுவதும் தகர சீட்டு அடிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கியூ ஆர் குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டுள்ள 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அனுமதியின்றி தொண்டர்கள் யாரும் உள்ளே வரக்கூடாது என்பதற்காக வளாகம் முழுவதும் மிகவும் உயரமான தகர சீட் அடிக்கும் பணி மும்முரமாக நடைபெறுகிறது.