செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே காணாமல் போன இளம்பெண்ணை கண்டுபிடித்து தரக்கோரி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இரண்டாவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர். வில்லிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி கல்லூரிக்கு சென்றிருந்த நிலையில் மாலை வரை வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் மாணவியை கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு நெடுஞ்சாலையில் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.