உயிரை கொடுத்தாவது திருமாவளவனை முதல்வராக்குவேன் என்ற சீமான் பேச்சுக்கு நன்றி தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், உயிரை கொடுக்காமலேயே முதல்வராக்க முயற்சி எடுக்க வேண்டும் என்றார். நாகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒவ்வொரு கட்சியினரும் ஆட்சி அதிகாரத்திற்கு வரவே கட்சி நடத்தி கொண்டிருப்பதாகவும் கூறினார்