செவி மாற்றுத்திறனாளி சிறுமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக உதவி செய்த சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திரிசூலம் பகுதியை சேர்ந்த சுரேஷ், செவி மாற்றுத் திறனாளியான தனது மகளை ஸ்டான்லி மருத்துவமனையில் காட்டிவிட்டு, மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தை பார்வையிடச் சென்றார். அப்போது, அங்கு வந்த முதலமைச்சரிடம் தனது மகளின் பிரச்னை குறித்து கூறினார்.