கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த தன்னை உயர்கல்வியின் அமைச்சராக நியமித்ததற்கு முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் கோவி செழியன் கூறியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புகழ்பெற்ற துறையாக விளங்கும் உயர்கல்வி துறையை மேம்படுத்த இன்னும் பிரகாசமாக செயல்படுவேன் என தெரிவித்தார்.