வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கூடாது என்று, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் திமுக, அதுகுறித்து தொகுதிகளில் நடைபெறும் கூட்டங்களில் மட்டும் பங்கேற்று, இரட்டை வேடம் போடுவதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் அலுவலர்கள் மூலம் முறையாக செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். அப்போது, செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர்கள், தவெக தலைவர் விஜய் குறித்து கேட்டபோது, ”நன்றி, வணக்கம்,” எனக் கூறிவிட்டு, பதில் அளிக்காமல் சென்றனர்.மேலும், வாக்காளர் பட்டியல் திருத்தத்தை அதிமுக முழு மனதாக வரவேற்கிறது. திமுக தொகுதியில் நடைபெறும் தேர்தல் கூட்டங்களில் சிறப்பு திருத்தத்தை ஆதரிக்கிறது. நீதிமன்றத்தில் மற்ற இடங்களில் எதிர்ப்பும், தொகுதி செயல்பாடுகளில் திமுக வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை ஆதரிக்கிறது என்றும் குற்றம் சாட்டினர்.