மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் உயரதிகாரிகள் மீது குற்றம்சாட்டி பேட்டியளித்த நிலையில், மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் தஞ்சை சரக டிஐஜி ஜியாவுல் ஹக் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் டிஎஸ்பி. சுந்தரேசனின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடைபெற்றதாகவும், வியாழக்கிழமை நள்ளிரவு முதல் தஞ்சை சரக டிஐஜி விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கலந்து கொண்டுள்ள நிலையில், தாம் கூறிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக, இதுவரை தன்னிடம் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை என டிஎஸ்பி. சுந்தரேசன் தகவல் தெரிவித்துள்ளார்.இதையும் படியுங்கள் : காமாட்சி அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்... ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு வழிபாடு